அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குபவர்களின் பின்னணியை கண்காணிக்க முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒஹையோவில் வால்மார்ட் நிறுவனத்தில் இரு தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக பேட்ரிக் க்ரூஸியஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் இணைந்து செயல்படுவது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், குடியேற்றவாதிகளையும் கட்டுப்படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment