தெனாலி படத்தில் தான் நடித்துக் காட்டியதை உண்மையாகவே நிஜ வாழ்க்கையில் அனுபவித்து வந்திருக்கிறார் என தர்ஷனுக்காக கமல், பிக்பாஸில் வருத்தப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் போடு ஆட்டம் போடு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ரஜினி, கமல், விஜயகாந்த் என திரை நட்சத்திரங்களாக போட்டியாளர்கள் நடித்தனர். அவர்களின் படப்பாடலுக்கு நடனமும் ஆடினர்.
அதன் தொடர்ச்சியாக கமலிடம், அந்த ரீல் கதாபாத்திரங்களாக மாறி போட்டியாளர்கள் சில கேள்விகளையும் கேட்டனர். அப்போது பிக்பாஸ் வீட்டில் எந்த போட்டியாளராக மாற விரும்புகிறீர்கள் என முகென் கமலிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு தர்ஷன் எனப் பதில் அளித்த கமல். தான் போட்ட வேடத்தை நிஜ வாழ்க்கையில் வாழ்ந்தவர் அவர் என்றார். தெனாலி படத்தில் இலங்கை தமிழராக நடித்ததை நினைவுக் கூர்ந்த கமல், தான் அவர்களுடைய ரசிகன் எனக் கூறி கண் கலங்கினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment