பேருந்தில் பெண்களை உரசிய விவகாரம் தொடர்பாக அதிரடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐந்தாவது போட்டியாளராக ரேஷ்மா நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டார். அதன் தொடர்ச்சியாக நேற்று நாமினேஷன் நடைமுறைகள் தொடங்கின. அதில், சரவணன், அபிராமி, லாஸ்லியா மற்றும் சாக்ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டார்கள்.
இந்நிலையில் நேற்றைய எபிசோட் முடிவடையும் நேரத்தில், யாரும் எதிர்பாராத வகையில், சரவணனை கன்பெக்சன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ், அவரை வெளியேற்ற முடிவு செய்திருப்பதாக அறிவித்தார். பேருந்தில் பெண்களை உரசியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையினால் சரவணன் வெளியேற்றப்படுவதாக பிக்பாஸ் கூறினார்.
இதையடுத்து கன்பெக்சன் அறையின் மற்றொரு கதவு வழியாக சரவணன் வெளியேறினார். ஹவுஸ்மேட்ஸ் யாரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பக்கூட சரவணனுக்கு பிக்பாஸ் அனுமதி கொடுக்கவில்லை. பார்வையாளர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
0 comments:
Post a Comment