ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி அமைப்பத குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைய வில்லையெனவும் எதிர்வரும் நாட்களில் தீர்மானம் மிக்க பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பு பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கடந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதியும், முன்னாள் ஜனாதிபதியும் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியதன் பின்னர், இறுதி முடிவுக்கு வருவது என ஸ்ரீ ல.சு.கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை மிக விரையில் நடைபேறும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் டளஸ் எம்.பி. மேலும் கூறினார்.
0 comments:
Post a Comment