காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தேசிய அளவில் விவாதம் ஆகி உள்ளது.
90 சதவீதம் பேர் மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்று ஆதரித்துள்ளனர். சில கட்சிகள் மட்டுமே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஏன் என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவாக விளக்கி சொல்ல பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
நாளை (புதன்கிழமை) அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய தொலைக்காட்சி சேனல்களில் அவரது உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இருப்பது இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு செய்யப்பட்டுள்ள மிகப் பெரிய வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வரலாற்றில் இது முக்கிய திருப்பமாகவும் கருதப்படுகிறது.
எனவே இதை நாடு முழுவதும் உள்ள மக்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று மோடி நினைக்கிறார். இதைத் தொடர்ந்துதான் 370-வது சட்டப்பிரிவு பற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பாராளுமன்றத்துக்கு வரும்போது கையில் சில பேப்பர்களை வைத்திருந்தார். அந்த பேப்பர்களில் அரசியலமைப்பு சட்டம், அரசியல், சட்டம்-ஒழுங்கு என 3 பிரிவுகளாக குறிப்புகள் இருந்தன.
இதன் மூலம் மத்திய அரசு 370-வது பிரிவை நீக்க மிகப்பெரிய அளவில் ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டது தெரிய வந்து இருக்கிறது. இதை பற்றியும் நாளை மோடி தனது உரையில் தெளிவுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment