காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் அமித்ஷா

ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பிரதமர் மோடி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அதன்பின், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இன்று பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் இந்த மசோதாவை அமித் ஷா அறிமுகப்படுத்தினார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment