2017ம் ஆண்டு தமிழில் வெளிவந்த படங்களில் முக்கியமான வெற்றியைப் பெற்ற படம் 'விக்ரம் வேதா'. புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி மற்றும் பலர் நடித்த இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக கடந்த இரண்டு வருடங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தன.
விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷாரூக்கான் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின. தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி ஆகியோரே ஹிந்தியிலும் இயக்கப் போகிறார்கள். இப்போது படத்தின் நடிகர்களில் முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.
விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷாரூக்கானுக்குப் பதிலாக ஆமீர்கான் நடிக்க உள்ளாராம். மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான் நடிக்கப் போகிறாராம். இந்தத் தகவலாவது உண்மையாகுமா அல்லது ஷாரூக்கான் நடிக்கப் போகிறார் என்பது போல பொய்யாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
0 comments:
Post a Comment