சரவணனைப் போல் கமலையும் வெளியேற்றுவார்களா ?

பிக்பாஸ் 3, நிகழ்ச்சியில் நேற்று ஆகஸ்ட் 5ம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியின் இறுதியில் நடிகர் சரவணனை கன்பெஷன் அறைக்கு அழைத்து ஒரு விளக்கம் கொடுத்து அவரை அந்த அறை வழியாகவே உடனடியாக வெளியேற்றினர். மீரா மிதுன், சேரன் இடையிலான சண்டையின் போது, கமல்ஹாசன் பேருந்துகளில் பெண்கள் பயணிப்பது பற்றி பேசினார். அப்போது குறிக்கிட்ட சரவணன் கல்லூரியில் படித்த போது நானும் உரசுவதற்காக பேருந்தில் பயணித்துள்ளேன் என்று கமெண்ட் அடித்தார்.



சரவணன் அப்படி சொன்ன கமெண்ட்டிற்கு கமல்ஹாசனும் அதை அப்போதே உடனடியாக கண்டிக்காமல், எதிர்ப்பு தெரிவிக்காமல், “ஐய்யய்யோ, அவரு அதையும் தாண்டி புனிதமாயிட்டாரு” என்றே அவருடைய பேச்சிற்கு கமெண்ட் கொடுத்தார். பார்வையாளர்களும் சரவணன் பேச்சிற்கும், கமல்ஹாசன் பேச்சிற்கும் கைதட்டி ரசித்தனர்.



இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மறுநாளே சரவணன் அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். அத்துடன் அந்த விவகாரம் முடிந்திருக்கும் என்று நினைத்தால், நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து அந்தக் காரணத்தை சொல்லி அவரை உடனடியாக வெளியேற்றினார்கள்.



சரவணன் மன்னிப்பு கேட்ட பிறகும் அவரை நீக்கியது சரியா, தவறா என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் நேற்று இரவே ஆரம்பமாகிவிட்டது. சரவணன் மன்னிப்பு கேட்டுவிட்டார். இருப்பினும் அவரை வெளியேற்றுவிட்டார்கள், அதுவும் சரிதான். ஆனால், அவரது கமெண்ட்டை சாதாரணமாக கடந்து போன கமல்ஹாசனையும் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றுவார்களா என பலரும் இப்போது கேள்வி எழுப்புகிறார்கள்.



நிகழ்ச்சியில் சேரனைத் தரக்குறைவாகத் திட்டியது, அதிகமான கன்டென்ட் தர முடியாத நிலையில் சரவணன் நடந்து கொள்வது ஆகியவையும் அவரது வெளியேற்றத்திற்குக் காரணம் என்றும் சொல்கிறார்கள்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment