ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் அக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) இரவு நடைபெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
பிரதமர் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் நேற்று மாலை கலந்துகொண்டதன் பின்னர் இச்சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், கூட்டணிக்காக அமைக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும் தனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment