ஜெர்மனியில் ஹோலோகிராம் மூலம் இயக்கப்படும் சர்க்கஸைக் காண குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
250 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த பழமையான சர்க்கஸ் நிகழ்வு, விலங்குகள் பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளால் பெரும்பாலான நாடுகளில் முடிவுக்கு வந்தது. இதனால் அழிவின் விளிம்பில் உள்ள சர்க்கஸ் கலையை மீட்டெடுக்க ஹோலோகிராம் டிஜிட்டல் தொழில்நுட்பம் உதவுகிறது. யானை, குதிரை, குரங்கு, மீன் என அனைத்தையும் மெய்நிகர் காட்சியாக வடிவமைத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒளிரும் விளக்குகளால் ஹோலோகிராம் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
அசலாக விலங்குகள் கண்முன் சாகசம் நிகழ்த்துவது போன்ற இந்தக் காட்சிகளை ஜெர்மனியின் லியூபெக்கில் உள்ள ரோன்கல்லி சர்க்கஸ் காட்சிப்படுத்தி வருகிறது. 20 வகையான சர்க்கஸ் நிகழ்ச்சிகளை 2 மணி நேரம் பார்த்து ரசிக்க ஆயிரத்து 500 பேர் ஒரே நேரத்தில் அமரும் மாடமும் நடுவில் சாகச வட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விலங்குகள் மட்டுமின்றி கோமாளிகளின் ஹோலோகிராம் நிகழ்ச்சிகளும், அவர்கள் நேரில் தோன்றும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
0 comments:
Post a Comment