வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நேர் கொண்ட பார்வை படம் நாளை மறுதினம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பிரிமீயர் காட்சி இன்று(ஆக.,6) சிங்கப்பூரில் காலை 9 மணிக்கு நடந்தது. பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்களுக்கான பிரிமீயர் காட்சியை ஒரு தினம் முன்னதாக மட்டுமே திரையிடுவார்கள். ஆனால் இப்படத்தை இரண்டு தினம் முன்பே திரையிட்டு ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள்.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறுகையில், எனது மனைவியின் கனவை பூர்த்தி செய்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். படத்திற்கான பத்திரிகையாளர் காட்சியும் இன்று காலை நடைபெறுகிறது.
0 comments:
Post a Comment