'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்திற்கு 'கர்ணன்' என பெயரைத் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றிக்குப் பிறகே இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால், தனுஷ் 'அசுரன், பட்டாஸ்' ஆகிய படங்களில் நடிக்கச் சென்று விட்டார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 2020 ஜனவரி மாதம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
இப்படத்திற்கு முன்னதாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் இங்கிலாந்தில் ஆரம்பமாக உள்ளது.
0 comments:
Post a Comment