'நேர்கொண்ட பார்வை' படமே ஹிந்திப் படமான 'பின்க்' படத்தின் தமிழ் ரீமேக் தானே, அதனால், 'பின்க்' தெலுங்கு ரீமேக்கில் பாலகிருஷ்ணா என்றுதானே இருக்க வேண்டும் என நீங்கள் சொல்வது கேட்கிறது.
பாலகிருஷ்ணாவை அமிதாப்பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்குமா என்று யோசித்திருப்பார்கள். ஆனால், படத்தைத் தெலுங்கில் தயாரிக்கலாமா என யோசிக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு, அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படத்தைப் பார்த்த பிறகுதான் அந்தக் கதாபாத்திரம் பாலகிருஷ்ணாவுக்கும் பொருத்தமாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தாராம்.
படத்தில் அனல் பறக்கும் நீதிமன்ற வசனக் காட்சிகள் இருக்கின்றன. தெலுங்கில் அப்படி அனல் பறக்கும் வசனங்களைப் பேசி ரசிகர்களிடம் அதிக கைத்தட்டல் பெறும் ஒரு நடிகர் பாலகிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது. தில் ராஜுவின் யோசனைக்கு பாலகிருஷ்ணா சம்மதம் சொல்லிவிட்டால் படம் உடனே ஸ்டார்ட் ஆகிவிடுமாம்.
0 comments:
Post a Comment