பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை மேலும் 200000 ரூபாவினால் அதிகரிப்பதற்கு கோரி முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் தான் கையொப்பம் இடவில்லையெனவும் அதனை தான் புறக்கணித்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பி.எம்.ஐ.சி.எச். இல் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அனுபவிக்கும் சலுகைகளும், வரப்பிரசாதங்களும் தேவைக்கும் அதிகமாக உள்ள நிலையில் மேலும் கொடுப்பனவை அதிகரிப்பது நியாயமற்றது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவையில் இது குறித்து என்னுடன் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. எனக்கு அழுத்தங்களும் வந்தன. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 4 லட்சம் ரூபாய் கிடைக்கப் பெறுகின்றது. இதற்கும் மேலதிகமாக 2 லட்சம் ரூபாய் கொடுப்பதை நான் அனுமதிக்க முடியாது எனவும் ஜனாதிபதி மேலும் கூறியுனார்.
0 comments:
Post a Comment