இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட ஸ்பிட்பஃயர் ரக விமானத்தை வடிவமைக்கும் பணியில் இங்கிலாந்தை சேர்ந்த 2 விமானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் கிழக்கு சஸெக்ஸ் பகுதியில், ஒற்றை இயந்திரம் கொண்ட சில்வர் ஸ்பிட்பஃயர் விமானம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற விமானம் இரண்டாம் உலகப் போரின்போது நேசப் படைகளால் பயன்படுத்தப்பட்டதாகும்.
நீண்டதூரம் பயணம் செய்யக் கூடிய வகையை சேர்ந்த இந்த விமானம், விமானிகள் ஸ்டீவ் ப்ரூக்ஸ், மத் ஜோன்ஸ் ஆகியோர் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. விமானத்தை வடிவமைக்கும் பணி இன்னும் 4 மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில்வர் ஸ்பிட்பஃயர் விமானம் மூலம் சுமார் 43 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர இரு விமானிகளும் திட்டமிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment