அமெரிக்காவில், நாய் ஒன்றை குளியல் தொட்டியில் வைத்து, சிம்பன்சி வகை மனித குரங்குகள் குளிப்பாட்டும் வீடியோ காட்சி வலைதளங்களில் பரவி வருகிறது.
தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள மிர்டில் பீச் சஃபாரி என்ற இடத்தில் அண்மையில், ஒருவர் தனது வளர்ப்பு நாயை குளியல் தொட்டியில் வைத்து குளிப்பாட்டிக்கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக அவர் வளர்த்து வந்த இரு சிம்பன்சி வகை மனித குரங்குகளும் நாய்க்கு ஷாம்பூ தேய்த்து குளிக்க வைத்தன. நாயை குளிப்பாட்டி முடிந்ததும், அந்த நபர் சிம்பன்சிகளின் உடலை தேய்த்தும், குரங்குகள் அவரை பதிலுக்கு தேய்த்தும் குளித்தன.
தற்போது இந்த காட்சிகள் வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கண்டு ரசித்துள்ளனர். மேலும் பலர் சிம்பன்சி வகை குரங்குகளை செல்ல பிராணிகளாக வளர்ப்பது ஆபத்து என்றும், அதனை உடனடியாக வீட்டிலிருந்து அகற்றும்படியும் ஆலோசனை கூறி வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment