ஒரு சிலர் அரசியல் பழிவாங்கல்களுக்கும் மேலும் சிலர் இனவாதத்திற்கும் இறையாகியுள்ளதாக பிரதம் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்களும், இனவாதமும் இல்லாவிட்டால் நாடு முன்னோக்கி பயணிக்க முடியுமாக இருக்கும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று (06) இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், திகன வன்முறைச் சம்பவத்தில் சொத்துக்களை இழந்தவர்களுக்கும் நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிக்கமைய இந்த நட்டஈட்டு தொகை வழங்கப்படுவதாகவும்,சிலர் இனவாதத்தால் வெற்றிப்பெற முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முன்னோக்கி பயணிக்க வேண்டுமாயின் வெறுமனே வருமானம் மாத்திரம் போதாது எனவும் ஒழுக்கமுள்ள கொள்கைகள் அவசியம் எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment