விடுதலைப் புலிகளின் தென்னந்தோப்பு பகுதி நேற்று எரிந்து நாசமாகியுள்ளது.
கிளிநொச்சி, முட்கொம்பனில் சின்னப் பல்வராயன் காட்டில் அமைந்துள்ள
தென்னந்தோப்பே எரிந்துள்ளது.
போருக்கு முன் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தென்னந்தோப்பு, பத்து ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னர் குறித்த தென்னந்தோப்பு தற்போது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
தென்னந்தோப்புக்கு அருகில் உள்ள காணியின் பற்றைக்கு நபர் ஒருவரால் வைத்த தீ இந்த தென்னந்தோப்புக்கும் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வறட்சியான காலநிலை மற்றும் காற்றுக் காரணமாக தீ தென்னந்தோப்புக்குள் வேகமாக பரவி, பல தென்னை மரங்களை எரித்துள்ளது எனப் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உடனடியாகப் பல தரப்பினரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
0 comments:
Post a Comment