மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
களுவாஞ்சிகுடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் மாகாணசபை தேர்தல் தொடர்பாக கருத்திற்கொள்ளாமல் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் கருத்திற்கொண்டே செயற்படுவதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தலோ ஜனாதிபதி தேர்தலோ முக்கியமல்ல, மாகாணசபை தேர்தலே தேவையாகவுள்ளதாகவும் மாகாணசபை தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யாவிட்டாலும் ஓரளவு அவர்களின் தேவையினை பூர்த்திசெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment