வவுனியா பேருந்து நிலைய வாயிலில் அமைந்துள்ள சோதனைச் சாவடியை துரிதகதியில் அகற்றுவதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்றுவவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது வவுனியா பேருந்து நிலைய வாயிலில் அமைக்கபட்டுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களைச் சந்திப்பதாக தனியார் போக்குவரத்து சங்கத் தலைவர் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இது தொடர்பாக மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் ஒருங்கினைப்பு குழுவால் விளக்கம் கோரப்பட்டது.
குறித்த சோதனை சாவடியை விரைவாக அகற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
அண்மையில் நாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் சம்பவத்தையடுத்தே குறித்த சோதனைச் சாவடி அமைக்கபட்டதுடன் பேருந்து நிலையத்திற்குள் செல்லும் பொதுமக்களின் பயணபொதிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
குண்டு வெடுப்பு சம்பவம் நிகழ்ந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் சோதனைச் சாவடி அகற்றபடாமையினால் பயணிகள் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன், விசனம் தெரிவித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment