ஓமந்தை ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் - துவிக்சக்கர வண்டி மோதி கோரவிபத்து : இருவர் படுகாயம்
மோட்டர் சைக்கிள் மற்றும் துவிச்சர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலிருந்து ஏ9 வீதி வழியாக யாழ்-நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிள் ஓமந்தை, கள்ளிக்குளம் சந்திக்கு அண்மையில் வீதியைக் கடக்க முற்பட்ட துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 14 வயதான நொச்சிமோட்டையைச் சேர்ந்த உருத்திரகுமார் திவாகர் மற்றும் மோட்டர் சைக்கிள் சாரதியான சுப்பிரமணியம் வெங்கடசரணியன் (வயது 35) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
விபத்துத் தொடர்பான விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் முன்னெடுத்து, வருகின்றார்கள்.
0 comments:
Post a Comment