மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை கரடியனாறு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தலைவியும் எட்டுமாவட்டங்களினதும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர் சங்கத்தின் உபதலைவியுமான அமலநாயகி அமல்ராஜ் மற்றும் அவரது மகளே இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.
திட்டமிட்ட வகையில் இனந்தெரியாத இருவரினால் இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment