பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படும் நிலையில் நேற்று ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். ரேஷ்மா வெளியேறுவார் என யாருமே எதிர்பார்க்காததால் சக போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக ரேஷ்மாவை 'அத்தை நீ செத்த' என்று கூறி நாமினேட் செய்த முகின் கிட்டத்தட்ட அழுதே விட்டார். அவருக்கு சக போட்டியாளர்கள் ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ரேஷ்மா கமல்ஹாசனை சந்தித்தபோது கமல்ஹாசன் ஒரு விஷயத்தைக் கூறி அவருக்கு ஆறுதல் கூறினார்.
அதாவது இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட ரேஷ்மாவுக்கு ஒரு கோடியே 30 லட்சம் வாக்குகள் கிடைத்ததாகவும், அவருக்கு அடுத்தபடியாக வந்த போட்டியாளருக்கு ஒரு கோடியே 32 லட்சம் வாக்குகள் கிடைத்ததாகவும், வெறும் 2 லட்சம் என்ற குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஒரு போட்டியாளர் தோல்வி அடைந்து வெளியேறுவது பிக்பாஸ் மூன்று சீசன்களில் இதுதான் முதல் முறை என்றும் அதனால் தான் ஆதரவின்றி வெளியேற்றப்பட்டு விட்டோம் என்று நினைக்காமல் ஒரு கோடியே 30 லட்சம் பேர் அவருக்கு ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள் என்ற எண்ணத்துடன் வெளியே செல்ல வேண்டும் என்று ஆறுதல் கூறினார்
கமல்ஹாசன் கூறிய இந்த ஆறுதல் ரேஷ்மாவுக்கு மிகவும் தன்னம்பிக்கையை அளிப்பதாக இருந்தது.
அவர் தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறியதோடு மற்ற போட்டியாளர்களை வாழ்த்தி விடைபெற்றார். குறிப்பாக முகின் இந்த விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.
0 comments:
Post a Comment