ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரேயே அறிவிக்கப்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை முகம்கொடுப்பதற்கு தேவையான பலத்தை திரட்டுவதற்கான கூட்டணி எதிர்வரும் ஐந்தாம் திகதி அமைக்கப்படவுள்ளது. இக்கூட்டணியில் பங்குகொள்ளும் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் என்பவற்றின் கருத்துக்களுக்கு ஏற்ப ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ளக் கூடிய பொருத்தமான ஒரு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment