காஷ்மீர் பிரிப்பு குறித்து கே.எஸ்.அழகிரி விமர்சனம்

காஷ்மீர் பிரிப்பு என்பது 'குரங்கு கையில் கிடைத்த பூமாலைபோல' என்று தமிழக காங்கிரஸ் தலைவர்  கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று கடும் அமளிக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35ஏ சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதுதொடர்பான மசோதாவை அவர் தாக்கல் செய்தார். 


இதைத்தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாக அமித் ஷா அறிவித்தார். அதன்படி ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என அமித் ஷா அறிவித்தார். சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்முவும், சட்டப்பேரவை இல்லாமல் யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என அவர் அறிவித்தார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு  பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,

''காஷ்மீர் மாநிலம் என்பது நேருவால் உருவாக்கப்பட்ட அற்புதமான கலைக்கூடம். ஆனால் இன்று மோடி, குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல அதைப் பிய்த்தெறிகிறார்.

அப்போதைய காஷ்மீர் மன்னர் ஹரிசிங், இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ சேரவேண்டாம். தனித்து இயங்கலாம் என்று முடிவு செய்தார். அதனால் நேரு, ஹரிசிங்கின் மனதை மாற்றி, இந்தியாவுடன் சேரக் கையெழுத்து வாங்கினார். 
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment