இஸ்லாமியர்களின் புனித நூலான அல்குர்ஆனில் இருப்பதாக கூறப்படும் வன்முறையைத் தூண்டும் விதத்தில் காணப்படும் விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு ராமங்ஞா பீடம் சார்பில் கருத்துத் தெரிவித்த கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று முன்தினம் (30) கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற சமாதானம், ஐக்கியம் மற்றும் நல்லிணத்திற்கான தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே தேரர் இதனைத் தெரிவித்தார்.
தான் குர்ஆனை விமர்சிக்கவில்லை. இருப்பினும், என்னிடம் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இதனால், அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்த விடயங்கள் தொடர்பில் விடையளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். அல்குர்ஆனில் இருப்பதாக நான் கூறும் கருத்து தவறாக இருந்தால் அதனை சரிசெய்யுமாறும் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் கேட்டுக் கொண்டார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஸ்செய்க் ரிஸ்வி முப்தி தனதுரையில் சோபித்த தேரரின் கருத்துக்கு இவ்வாறு பதிலளித்தார்.
முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் உலமாக்களும் இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டியுள்ளனர். தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ள அல்குர்ஆனின் வசனங்கள் தொடர்பில் சிங்கள மொழியில் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முஸ்லிம் சமூகம் அந்தப் புத்தகங்களை வாங்கி மாற்று மத சகோதரர்களுக்கு வழங்குவதன் ஊடாக இந்த தப்பான கருத்தை சரிசெய்யலாம் எனக் கூறினார்.
0 comments:
Post a Comment