கே.வி. ஆனந்த் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'காப்பான்'. இப்படத்தை ஆகஸ்ட் 30ம் தேதி வெளியிடப் போவதாக எப்போதோ அறிவித்தார்கள்.
ஆனால், தெலுங்குப் படமான 'சாஹோ' படத்தை ஆகஸ்ட் 15ம் தேதியிலிருந்து 30ம் தேதிக்கு மாற்றினார்கள். அதனால், அப்படத்துடன் போட்டியிட வேண்டாமென முடிவு செய்து படத்தை செப்டம்பர் 20ம் தேதிக்கு மாற்றியுள்ளார்கள் என நாம் நேற்றே செய்தி வெளியிட்டிருந்தோம்.
சற்று முன்னர் அதே தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். தமிழில் 'காப்பான்' , தெலுங்கில் 'பந்தோபஸ்து' என ஒரே நாளில் இரண்டு மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.
0 comments:
Post a Comment