கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர் குறிப்பாக இரண்டு ஊடக நிறுவனங்கள் இனவாதத்தை தூண்டும் வகையில் வைராக்கியமான செய்திகளை வெளியிட்டு வந்ததாகவும், இதனால் தான் அந்நிறுவனங்களுக்கு விளம்பரங்களை வழங்க வேண்டாமென நான் எனது அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுக்கு அறிவித்தேன் எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நான் இத்துறைக்குப் பொறுப்பான அமைச்சரல்ல. என்றாலும் நான் இந்த ஊடக நிறுவனங்களுக்கு விளம்பரம் வழங்குவதை நிறுத்தியதையடுத்தே அவர்கள் எனக்கு எதிரான செய்திகளை ஒளிபரப்புச் செய்ய ஆரம்பித்தனர் எனவும் அமைச்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
தினியாவல பாலித்த தேரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களின் பின்னணியிலுள்ள அரசியல்வாதி யார் என்பது தொடர்பில் தான் விரைவில் அம்பலப்படுத்துவேன் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக தினியாவல பாலித்த தேரர் முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மை குறித்து கண்டறியாது அதனை ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகவும் நிதி அமைச்சர் மேலும் கூறியுள்ளதாக அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment