துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமானம் செய்து கொண்ட அப்துல்லா மஃறூப் இன்று (30) செவ்வாய்க் கிழமை கொழும்பில் உள்ள பிரதியமைச்சர் அலுவலகத்தில் வைத்து தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன் போது துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி கே.என்.குமாரி சோமரத்ன, மேலதிக செயலாளர்(நிருவாகம்) திருமதி. ஹேரத்,துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் அதுல ஹேவா விதாரண உப்பட பிரதியமைச்சரின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
0 comments:
Post a Comment