திமுக உறுப்பினர் துரைமுருகன் தொடர்பில் பெரும் சர்ச்சைகள் வெளியாகி வருகின்ற இதே வேளை அவரி மகனையும் முகம்தெரியாத நபர்கள் லொரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.
இதே வேளை வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், தனது வீட்டுத் தோட்டத்தில் பணத்தை வைத்தது யார் என்றும், தமது மகன் மீது பாரவூர்தி ஏற்றிக் கொல்ல முயன்றது யார் என்று தெரியும் என்றும் இவர் கூறிய கருத்துக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தத் துரோகத்தை செய்தவர்கள் யார் என்று தெரியும் என்று அவர் கண் கலங்கினார். என்ன நேர்ந்தாலும் உயிர் உள்ள வரை திமுகவில் தான் இருப்பேன் என்றும் துரைமுருகன் உறுதிபடத் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment