தமிழக சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டு இருந்தது.
பின்னர் அதை திரும்ப பெறுவதற்கான கடிதத்தை தி.மு.க.வினர் கொடுத்துள்ளனர். இதையடுத்து சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது. இதை இன்று சட்டசபையில் சபாநாயகர் தனபால் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 30.4.2019 அன்று சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. பின்னர் அதை கைவிடுவதாக கடந்த 28-ந்தேதி முறைப்படி கடிதம் அளிக்கப்பட்டது. அது ஏற்கப்பட்டுள்ளது. எனவே சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வலியுறுத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment