தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள முறைமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரம் 16ஆம் திகதி முதல் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் மத்திய அஞ்சல் பணிமனையின் அனைத்து பணியாளர்களும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் வாரம் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதேவேளை, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்புக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அஞ்சல் பணியாளர்களது பிரச்சினைகள் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை ஒன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment