தன்மீதான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லையென்பது நிரூபனமாகியுள்ளதாக ஹிஸ்புல்லா

தன்மீது சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டும் உண்மையானவை அல்ல என்பது அனைத்து வகையான விசாரணைகள் ஊடாகவும் தற்போது நிரூபனமாகியுள்ளதாக கிழக்கின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
முன்னாள் போராளியொருவர் செய்திருந்த முறைப்பாடு குறித்து, திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவில், நேற்று வாக்குமூலம் வழங்கியதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “முன்னாள் போராளியொருவர் என்னாலோ அல்லது எனக்கு நெருங்கிய ஒருவராலோ தனக்கு உயிர் அச்சுறுத்தல் விக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடளித்துள்ளார். அது விசாரணைகளின் ஊடாக பொய்யான ஒரு தகவல் என தெரியவந்துள்ளது.
எனினும், இதுகுறித்து எனது வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே நான் இங்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
தற்போது, எனக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் என்பது பொலிஸாரின் விசாரணையின் ஊடாக தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரரின் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் பொய்யானவை என்று உறுதியாகியுள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர், தீவிரவாத விசாரணைப் பிரிவினர் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் விசாரணைகளை நடத்திய பின்னரே, எம்மீது குற்றங்கள் இல்லை என தற்போது நிரூபனமாகியுள்ளன.
இதனை என்மீது குற்றம் சுமத்திய தரப்பினர் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதுகுறித்து என்னால் கருத்து கூறமுடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment