பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மட்டும் விளையாடவுள்ளது
இதன்மூலம் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு பின்னர், நடைபெறவுள்ள முதல் தொடராக இத்தொடர் அமையவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தீவிரவாதிகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், பாதுகாப்பு காரணங்கள் கருதி பங்களாதேஷ் அணியின் இலங்கை சுற்றுப் பயணம் இரத்துச் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து, இத்தொடரை நடத்துவதற்கு இலங்கையில் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
அவர்கள் தற்போது இலங்கையில் சுமூநிலை தோன்றுவதை அவதானித்திருப்பதால், இத்தொடரை நடத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இம்மாதம் 23ஆம் திகதி இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 01ஆம் திகதி வரை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்த ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவு போட்டிகளாக நடைபெறவுள்ளன.
0 comments:
Post a Comment