முல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த வீட்டுத்திட்டங்களை அவர் தனது கட்சி ஆதரவாளர்களுக்கு மாத்திரமே வழங்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக நேற்று பாதிக்கப்பட்ட மக்கள் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“நீராவிப்பிட்டி, ஹிச்சிராபுரம் பகுதிகளில் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களுக்காக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் பல நிபந்தனைகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த நிபந்தனைகளுக்கு உட்படாதவர்களுக்கு இவ்வாறு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
நீண்டகாலம் இடம்பெயர்ந்து பல்வேறுபட்ட இன்னல்ளுடன் இருக்கும் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர்.
மேலும் நீணடகாலம் இடம்பெயர்ந்தவர்களுக்காக வழங்கப்படவுள்ள கொடுப்பனவுகளும் ரிசாட் பதியுதீனின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட தயாராக இருக்கின்றது.
இது குறித்து மாவட்ட செயலாளர், பிரதேசசெயலாளர் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரையில் எவ்வித தீர்வுகளும் எட்டப்படவில்லை.
எனவே உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான வீட்டுத்திட்டங்களும் கொடுப்பனவுகளும் வழங்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டனர்.
0 comments:
Post a Comment