ஆடுகளை வெட்டிக் கொன்று விட்டு, வீட்டுக்கும் தீ வைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் முல்லைத்தீவு விசுவமடு மேற்கு பகுதியில் நடந்துள்ளது.
தனது வீட்டில் நின்ற நான்கு ஆடுகளை வெட்டி விட்டு, குறித்த நபர் வீட்டுக்கு தீ வைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டில் இருந்த உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், நான்கு ஆடுகளும் உயிரிழந்துள்ளன.
சம்பவத்தின் போது வீட்டில் மனைவி, பிள்ளைகள் எவரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment