நாட்டின் பொது எதிரி யார் என்பதை அடையாளம் கண்டுகொள்ளாமல் ஒவ்வொருவரும் கூறும் கருத்துக்களின் பின்னால் சென்று குழப்பிக் கொள்ள வேண்டாம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ள பௌத்த விரோத கருத்துக் குறித்து நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இவ்வாறு கூறினார்.
அண்மைக் காலத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர என்பவர் இது பௌத்த நாடு அல்லவென ஒரு அறிவிப்பைச் செய்திருந்தார். அரசியல் களத்தின் போக்குகளைச் சிதைக்கச் செய்யும் நடவடிக்கைகளே இவை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த அரசியல் போக்கின் யதார்த்தத்தை நாம் புரிந்துகொண்டே செயற்பட வேண்டும் எனவும் தேரர் மேலும் கேட்டுக் கொண்டார்.
0 comments:
Post a Comment