சீன விண்கலத்தை உருவாக்கும் பணியை சீன விஞ்ஞானிகள் நிறைவு செய்தனர்

செவ்வாய் கிரகத்துக்கு செலுத்தப்படவுள்ள சீன விண்கலத்தை உருவாக்கும் பணியை சீன விஞ்ஞானிகள் நிறைவு செய்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக 2020 ஆம் ஆண்டு ஜூலை அல்லது ஒகஸ்டு மாதமளவில் விண்கலத்தை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
இதற்கான விண்கலத்தை உருவாக்கும் பணியை சீன விஞ்ஞானிகள் நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய் கிரகத்தின் தோற்றம் மற்றும் அமைப்பு, காந்தப்புலம் உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.
அதன்மூலம், செவ்வாய் கிரகம் உருவான விதம், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை தெரிந்துகொள்ள முடியும் என்று சீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அத்துடன், செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் வாழும் அறிகுறி உள்ளதா? அங்கு மனிதர்கள் வாழும் அளவுக்கு நிலைமை மாறுமா? உள்ளிட்ட விடயங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது.
குறித்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய 7 மாதங்கள் செல்லும் எனவும், இந்த பயணம் வெற்றிகரமாக அமைந்தால், 2021ஆம் ஆண்டில் அந்த விண்கலம் பூமிக்கு தகவல்களை அனுப்பும் எனவும் நம்பிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment