டுபிளசி அணி ஏமாற்றம்

குளோபல் ‘டுவென்டி–20’ லீக் போட்டியில் ஏமாற்றிய டுபிளசி தலைமையிலான எட்மன்டன் அணி, 27 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கனடாவில், குளோபல் ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடருக்கான முதல் சுற்று நடக்கிறது. இதன் லீக் போட்டியில் டுபிளசி தலைமையிலான எட்மன்டன் ராயல்ஸ் அணி, கோலின் முன்ரோ வழிநடத்தும் பிராம்ப்டன் வோல்வ்ஸ் அணியை சந்தித்தது.
‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த பிராம்ப்டன் அணிக்கு கேப்டன் முன்ரோ (9), நிதிஷ் குமார் (10), ரோகன் முஸ்தபா (7) ஏமாற்றினர். சிம்மன்ஸ் (59), ஷாகித் அப்ரிதி (81*) கைகொடுக்க, பிராம்ப்டன் அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது.
கடின இலக்கை விரட்டிய எட்மன்டன் அணிக்கு முகமது ஹபீஸ் (5), பென் கட்டிங் (2), ஆகாஷ் கில் (3) உள்ளிட்டோர் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ஜேம்ஸ் நீஷம் (33), ரிச்சீ பெர்ரிங்டன் (28), ஷதாப் கான் (27), கேப்டன் டுபிளசி (21) ஆறுதல் தந்தனர்.
எட்மன்டன் அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 180 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
வான்கூவர் தோல்வி
மற்றொரு லீக் போட்டியில் கிறிஸ் கெய்ல் (45), வான் டெர் துசென் (39), சோயிப் மாலிக் (28*) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள வான்கூவர் நைட்ஸ் அணி (208/5, 20 ஓவர்), 7 விக்கெட் வித்தியாசத்தில் டுமினி (77*), டுவைன் பிராவோ (36*), கிறிஸ் லின் (74) உள்ளிட்டோர் அடங்கிய வின்னிபெக் ஹாக்ஸ் அணியிடம் (210/3, 15.2 ஓவர்) வீழ்ந்தது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment