வவுனியாவில் 42 பயிற்றுவிப்பாளர்களுக்கான இறுதி கட்டப் பயிற்சி இன்று இடம்பெற்றது.
அண்மையில் புதிதாக நியமனம் பெற்ற பயிற்சியாளர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சிகள் இன்று வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
வவுனியா தெற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் தலைமையில், ஆசிரிய ஆலோசகர் யூட் பரதகுமாரின் ஒழுங்கமைப்பில் கடந்த ஒன்பது நாள்களாக தொடர்ச்சியாக இப்பயிற்சி வகுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதில், வவுனியா வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த 42 பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பயிற்சி வகுப்புக்கான வளவாளர்களாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment