ஜப்பானின் சைதமா நகரில் நடைபெற்ற ராக்குடென் கோப்பை கால்பந்து போட்டியில் பிரபல கிளப் அணிகளான பார்சிலோனா எப்சி - செல்சீ அணிகள் மோதின.
மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் செல்சீ அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
அந்த அணியின் டாமி ஆபிரகாம், ரோஸ் பார்க்லி அபாரமாக கோல் அடித்தனர். பார்சிலோனா சார்பில் ராக்கிடிச் ஆறுதல் கோல் போட்டார்.
இப்போட்டியில் களமிறங்கிய மெஸ்ஸி, கிரீஸ்மேன் உள்ளிட்ட பார்சிலோனா அணி நட்சத்திர வீரர்களை பார்ப்பதற்காக ஜப்பான் ரசிகர்கள் சைதமா ஸ்டேடியத்தில் ஆர்வமுடன் திரண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment