தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்திருந்த தேசிய ஆள் அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை இன்று (08) முதல் மீண்டும் செயற்படுவதாக ஆட்பதிவுத் திணைக்கள திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
திணைக்களத்தின் உள்ள கணனி வலையமைப்புக்குள் இடம்பெற்ற கோளாறு காரணமாகவே இந்த செயலிழப்பு இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாள் சேவையினூடாக 1500-2000 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment