விமலுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முறைகேடாக சொத்து சேகரித்ததாக முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஓகஸ்ட் 8 ஆம் திகதி ஒத்திவைக்கப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2009 ஜனவரி முதல் 2014 டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் வருமானத்திற்கு மேலதிகமாக 75 இலட்சம் ரூபாய் நிதி மற்றும் சொத்துகளை வைத்திருந்தது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கில் சாட்சிகளாக பெயரிடப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கணினி அமைப்புகள் குறித்து விசாரிக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சராக இருந்த காலத்தில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல், 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை இந்த சொத்துக்களை குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட விமல் வீரவன்ச பெற்றுக்கொண்ட தனது சம்பளத்தைப் பயன்படுத்தி பெரிய அளவில் சொத்துக்களை குவித்திருக்க வாய்ப்பில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வாதிட்டு வருகின்றது.
அதன் பிரகாரம் விமல் வீரவன்சவுக்கு எதிராக 39 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment