அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் இரண்டாவது நாளாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அடுக்குமாடிக் கட்டிடங்கள் சேதமடைந்தன.
அமெரிக்காவில் வியாழக்கிழமையன்று, ரிட்ஜ்கிரஸ்ட் ((Ridgecrest)) நகருக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொஹாவி பாலைவன ((Mojave Desert)) பகுதியில், பூமிக்கு 11 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் குலுங்கின.
வெள்ளிக்கிழமை இரவு, ரிட்ஜ்கிரஸ்ட் நகருக்கு அருகே பூமிக்கு ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், தெற்கு கலிஃபோர்னியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டன. குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து, ரிக்டர் அளவில் 4 ஆக பதிவான 16 பின்னதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் நிலநடுக்க பின்னதிர்வுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
0 comments:
Post a Comment