வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 27 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பெய்த கனமழையால் வெள்ள நீர் வடியாத நிலையில் தற்போது மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிவாரண முகாம்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசு அதிகப்படுத்தியுள்ளது.
மாநிலம் முழுவதும் 768 நிவாரண முகாம்களில் ஒரு லட்சத்து 58 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மழை காரணமாக 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 17 மாவட்டங்கள் மிக மோசமான அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையரகம் தெரிவித்துள்ளது.
பிரம்மபுத்திரா நதி அபாய அளவைக் கடந்து ஓடுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
0 comments:
Post a Comment