இலங்கையில் தளம் அமைக்கிறது சீனா

சினோபெக் எனப்படும் சீனாவின் பெற்றோலிய மற்றும் இரசாயனவியல் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் நிறுவனமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த நிறுவனம் Fuel Oil Sri Lanka Co Ltd என்ற பெயரில் அம்பாந்தோட்டையில் செயற்படவுள்ளது.
மேலும் இந்த நிறுவனத்தின் ஊடாக கப்பல்கள் மற்றும் மின்உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் பிரதான கடல்வழிப் பாதையில் செல்லும் கப்பல்களுக்கு, எரிபொருள் விநியோகங்களை மேற்கொள்வதே எமது முக்கிய நோக்கமென சினோபெக் தெரிவித்துள்ளது.
பிராந்திய நலன்களுக்காக இலங்கையை குறிவைத்து செயற்படுவதாதக விமர்சிக்கப்படும் மற்றொரு நாடான இந்தியாவின் ஐ.ஓ.சி. எனப்படும் இந்தியன் ஓயில் கோப்பிரேஷன் என்ற நிறுவனம் இலங்கையின் பல பாகங்களிலும் தங்களுடைய கிளைகளை அமைத்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தற்போது சீனா நிறுவனமும் கால் பதிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment