உலக வர்த்தக அமைப்பின், வளர்ந்த நாடுகள் விதியை மாற்ற அனைத்து முயற்சிகளையும் செய்ய போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்த விதியை சீனா தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
164 நாடுகள் இடம்பெற்றுள்ள உலக வர்த்தக அமைப்பில், 3 ல் இரண்டு பங்கு நாடுகள் வளரும் நாடுகள் என பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நாடுகளுக்கு குறிப்பிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை தவறாக பயன்படுத்தி வருகிறது. இதனால், சீனாவை வளரும் நாடு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இந்த விதிகளை, தவறாக பயன்படுத்தி சீனா, குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. இதனால், வாகன உற்பத்தி உள்ளிட்ட அமெரிக்காவின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன. வளரும் நாடு என்ற சீனாவின் நிலைப்பாட்டை ஏற்று கொள்ள முடியாது எனக்கூறியுள்ளது.
அதிபர் டிரம்ப் கூறுகையில், உலக வர்த்தக அமைப்பு, உடைந்துவிட்டது. வளரும் நாடுகள் எனக்கூறிக்கொள்ளும் பணக்கார நாடு, சிறப்பு சலுகைகளை பெற்று வருகிறது. அமெரிக்காவின் சலுகைகளை பெற்று வருகிறது. இதனால், விதிகளை மீறும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment