எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் நிபந்தனையற்ற ஆதரவை தமிழ் பிரதிநிதிகள் வழங்குவது, தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அனுகூலங்களையும் வழங்காதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கடந்த காலங்களில் எந்தவிதமான நிபந்தனைகளுமின்றியே வாக்களிப்புகள் இடம்பெற்றன. அதனால் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாக கூட்டமைப்பின் தலைவரே தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் குரலாக இருப்பதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.
தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்கக்கூடியவர்கள் யாரென்பதை அனைத்து தமிழ் தரப்புகளும் இணைந்து கலந்துரையாட வேண்டும். இதன்மூலம் சரியானதொரு ஜனாதிபதி வேட்பாளரை இனங்காண முடியும்
சிதைவடைந்து வாக்களிப்பதைவிட அனைவரும் இணைந்து கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment