வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் காற்றில் பறக்­க­விட்­டு­விட்­டது

சர்­வ­தேச சமூ­கத்­திற்கு அளித்த வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் காற்றில் பறக்­க­விட்­டு­விட்­டது. இந்த நிலை தொட­ர­மு­டி­யாது. அடுத்­து­ வரும் மாதங்­களில் இதற்­கெ­தி­ரான நட­வ­டிக்­கை­களை நாங்கள் மேற்­கொள்­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.
ஆயு­த­மேந்தி போரா­டி­னால்தான் அர­சியல் தீர்வு சம்பந்­த­மாக நீங்கள் ஆக்க பூர்­வ­மாக கரு­மங்­களை முன்­னெ­டுப்­பீர்கள் என்றால் மற்றும் ஆயுதப் போராட்டம் இல்­லா­விட்டால் ஆயுதப் பலம் இல்லா­விட்டால் அதைக் கைவி­டலாம் என நினைப்­பீர்கள் என்றால் அடுத்துவரும்...
அது ஒரு தவ­றான நிலைப்­பா­டாகும் என்றும் அவர் குறிப்­ப­பிட்டார்.
ஆட்சித் தலை­வர்கள், பெரும்­பான்­மை­யினத் தலை­வர்கள் தாங்கள் விரும்­பு­கின்ற சில கரு­மங்­களை நிறை­வேற்­று­வ­தற்­காக அர­சியல் தீர்வு ஏற்­ப­டு­வ­தையும் அதி­காரப் பகிர்வு ஏற்படுவதையும் தாம­திப்­ப­தற்கு முயற்­சிக்­கி­றார்கள் என்று எங்­க­ளுக்கு ஒரு சந்­தேகம் எழு­கின்­றது எனவும் சம்­பந்தன் சசுட்­டிக்­காட்­டினார்.
இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் மாநாடு நேற்று யாழ் வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.
அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்
தந்தை செல்வா தமி­ழ­ரசுக் கட்­சியை ஒரு இலக்கை அடை­வ­தற்­காக தமிழ் மக்கள் இந்­நாட்டில் இந்த நாட்­டில உள்­ளக சுய மரி­யா­தை­யுடன் கௌர­வ­மாகஇ சுதந்­தி­ர­மாக பாது­காப்­பாக வாழ வேண்டும் என்­ப­தற்­காக ஆரம்­பித்தார். தந்தை செல்வா கட்­சியை ஆரம்­பித்து 70 வரு­டங்கள் ஆகி­விட்­டன. அந்தப் பாதையில் நாங்கள் நீண்­ட­தூரம் பய­னித்­தி­ருக்­கின்றோம்.
சில முக்­கி­ய­மான மாற்­றங்­களை ஆட்­சி­யிலே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றேறாம். ஆனாலும் இன்­னமும் ஒரு இறு­தி­யான முடிவு மற்றும் உறு­தி­யான முடிவு ஏற்­ப­ட­வில்லை. உரிய நேரத்தில் உரிய காலத்தில் சந்­தர்ப்­பங்கள் வரு­கின்­ற­பொ­ழுது அதை முழு­மை­யாக நாங்கள் பயன்­ப­டுத்­தா­விட்டால் அத­னு­டைய விளை­வுகள் சில சமயங்­களில் பார­தூ­ர­மாக இருக்­கலாம்.
எமது பிரச்­சி­னை­யா­னது 47ஆம் ஆண்­டிற்கு முன்­ப­தாக இலகுவாகத் தீர்க்­கப்­பட்­டி­ருக்­கலாம். தந்தை செல்வா வைத்த கொள்­கையின் அடிப்­ப­டையில் செய்­தி­ருக்­கலாம். ஆனால் அவ்வித­மான எண்­ணப்­பாட்டை இலங்கை ஆத­ரிக்­க­வில்லை. இந் நாட்டின் ஏனைய தலை­வர்கள் விசே­ட­மாக கண்­டியத் தலை­வர்கள் அதே கேள்­வியை முன்­வைத்­தனர். இந்த நாட்டில் ஓர் சமஷ்டி ஆட்சி முறை ஏற்­பட வேண்டும் என்று கேட்­டனர். அதை நாங்கள் கேட்­க­வில்லை.
யாழ்ப்­பா­ணத்தின் இளைஞர் பேரவை இலங்­கைக்கு பூரண சுதந்­திரம் வேண்டும் எனக் கேட்­டது. சமஸ்டி கேட்­க­வில்லைஇ அதி­காரப் பகிர்வு கேட்­க­வில்லை, உள்­ளக சுய நிர்­னய உரிமை கேட்­க­வில்லை இருந்­த­போ­திலும் கூட இதற்­காக நாங்கள் இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாக வாழ வேண்­டிய தேவை­யில்லை.
இதன்­பி­ர­காரம் நாங்கள் கனி­ச­மான தூரம் முன்­னே­றி­யி­ருக்­கின்றோம்.இந்­திய முன்னாள் பிர­தமர் இந்­தி­ரா­காந்­தியின் தலை­யீடு கார­ண­மாக 1987ஆம் ஆண்டு இந்­தியப் பிர­தமர் ரஜீவ் காந்­தியின் தலை­யீடு கார­ண­மாக 13வது அர­சியல் சாசனத் திட்டம் நிறை­வேற்­றப்­பட்டு முதல் முறை­யாக ஓர் அதி­காரப் பகிர்வு ஆட்­சி­முறை மத்­தியில் ஏற்­பட்­டது.
அதன் அடிப்­ப­டையில் எங்­க­ளுக்கு ஓர­ள­விற்கு வட­கி­ழக்கு இணைந்த சுயாட்சி கிடைத்­தது. ஆனால் அது போது­மா­ன­தல்ல அது இன்னும் முன்­னேற வேண்டும். அது உறு­தி­யா­ன­தல்ல. அது நிறைவு பெற வேண்டும். உல­கத்தின் பல்­வேறு நாடு­களின் பல்­வேறு ஆட்சி முறைகள் அதி­காரப் பகிர்வின் அடிப்­ப­டையில் திகழ்ந்து வரு­கின்­றன. இவை­யெல்லாம் உதா­ர­ணங்கள்.
இவற்றை முன்­னேற்­று­வ­தற்­காக 13வது திருத்­தச்­சட்டம் நிறை­வேற்­றப்­பட்ட பிறகு ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தாசா காலம் சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்கா காலம் மகிந்த ராஜ­பக்ச காலம் என்­ப­ன­வற்றில் கணி­ச­மான முன்­னேற்றம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.
ஆனால் அவை உறுதி செய்­யப்­ப­ட­வில்லைஇ அர­சியல் சாச­னத்தில் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. அது நிறைவு பெற வேண்டும். இந்தப் பாரா­ளு­மன்றம் தெரி­வு­செய்­யப்­பட்ட பிறகு ஏக மன­தாக தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு அந்தத் தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் பல கரு­மங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு அதிலும் சில முன்­னேற்­றங்­களைக் கண்டு அவை தற்­போது மந்த கதியில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.
இதனை நாங்கள் ஆத­ரிக்­கப்­போ­வ­தில்லை. எங்­க­ளுக்கு ஒரு சந்­தேகம் எழு­கின்­றது. ஆட்சித் தலை­வர்கள் பெரும்­பான்­மை­யினத் தலை­வர்கள் தாங்கள் விரும்­பு­கின்ற சில கரு­மங்­களை நிறை­வேற்­று­வ­தற்­காக அர­சியல் தீர்வு ஏற்­ப­டு­வ­தையும், அதி­காரப் பகிர்வு ஏற்­ப­டு­வ­தையும் தாம­திப்­ப­தற்கு முயற்­சிக்­கி­றார்கள். எமது பிர­தே­சங்­களில் விசே­ட­மாக கிழக்கு மாகா­ணத்தில் வடக்கு மாகா­ணத்தில் குடி­யேற்­றங்கள் நடை­பெற்று வரு­கின்­றன.
அங்­கி­ருக்­கின்ற சனத்­தொ­கையின் விகி­தா­சா­ரத்தை மாற்றியமைக்கக்­கூ­டிய வகையில் பல்­வேறு வழி­வ­கை­களில் பல கரு­மங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. காணிகள், காடுகள் சம்பந்தமாக வன இலாகா வன­வி­லங்குத் திணைக்­களம்இ மகா­வலி அதி­கா­ர­சபைபோன்­றவை காணி அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்தி அதன் மூல­மாக குடி­பெ­யர்ந்த மக்கள் சொந்த இடங்­க­ளுக்குத் திரும்ப முடி­யான நில­மை­யையும் சொந்த நிலத்தில் விவ­சாயம் செய்ய முடி­யாத நில­மை­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர்.
அதே நேரத்தில் பிற மாவட்­டங்­களைச் சேர்ந்த மக்கள் எமது பாரம்­ப­ரிய நிலங்­களில் குடி­யே­று­கின்ற நிலையைக் காண்கின்றோம்.
இவ்­வி­த­மான பல நிகழ்ச்சித் திட்­டங்­களை நிறை­வேற்­று­வ­தற்­காக அதி­காரப் பகிர்­வு­களை தமிழ் மக்­க­ளுக்கு வழங்­காமல் பல நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­வதை நாங்கள் அவ­தா­னிக்­கின்றோம். இது பார­தூ­ர­மான செயற்­பாடு . இதனை அனு­ம­திக்க முடி­யாது. இதனை நாங்கள் அனு­ம­திக்க மாட்டோம். இதற்கு விரைவில் முடிவு காணுவோம்.
யுத்தம் நடை­பெற்ற காலத்தில் தழி­ழீழ விடு­தலைப் புலிகள் அழிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக ஒவ்­வொரு அர­சாங்­கத்தின் காலத்­திலும் முன்­னேற்­றங்கள் ஏறு­ப­டுத்­து­வ­தற்கு பல நட­வ­டிக்­கைகள் மேற்கொள்­ளப்­பட்­டன.
ஆனால் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அழிக்­கப்­பட்ட பிறகு புதிய அர­சாங்­கத்தின் நிரலில் புதிய அர­சியல் சாசனம் உரு­வாக்­கு­வது என்று 2016 ஆம் ஆண்­டிலே ஓர் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட்து. அதன் அடிப்­ப­டையில் பாரா­ளு­மன்றம் ஒரு அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு ஒரு நட­வ­டிக்கைக் குழு ஏற்­ப­டுத்­தப்­பட்டு பல உப குழுக்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டன். இதில் பல முயற்­சிகள் நடை­பெற்­றாலும் கூட இன்­றைக்கு ஆயு­த­மேந்­தி­ய­வர்கள் எங்­க­ளுடன் இணைந்து செயற்­பட முடி­யாத நிலையில் அதனை இல்­லாமற் செய்­கின்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஆயு­த­மேந்தி போரா­டி­னால்தான் அர­சியல் தீர்வு சம்­மந்­த­மாக நீங்கள் ஆக்க பூர்­வ­மாக கரு­மங்­களை முன்­னெ­டுப்­பீர்கள் மற்றும் ஆயுதப் போராட்டம் இல்­லா­விட்டால் ஆயுதப் பலம் இல்­லா­விட்டால் அதைக் கைவி­டலாம் என நினைப்­பீர்கள் என்றால் அது ஒரு தவ­றான நிலைப்­பா­டாகும்.
அவ்­வி­த­மான ஒரு கரு­மத்தை நீங்கள் பின்­பற்­று­கின்­றீர்கள் என்று சிந்­திக்கத் தோன்­று­கின்­றது. அதையும் நாங்கள் பரி­சீ­லிப்போம். யுத்தம் நடை­பெற்­ற­பொ­ழுது அதற்கு அடுத்­த­தாக வந்த அர­சாங்­கங்கள் வாக்­கு­றுதி கொடுத்­தன. சர்­வ­தேச சமூ­கத்­திற்கு ஐக்­கிய நாடுகள் சபைக்கு ஐரோப்­பிய ஒன்­றியம் உள்­ளிட்ட பல்­வேறு நாடு­க­ளுக்கு நாங்கள் இந்தப் பிரச்­சி­னையைத் தீர்ப்போம் என்று வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­டது.
அவ்­வி­த­மான வாக்­கு­று­தியின் அடிப்­ப­டையில் சர்­வ­தேச சமூ­கமும் இலங்கை அர­சாங்­கத்­திற்கு பல்­வேறு உத­வி­களை நல்­கின. தமி­ழீழ விடு­தலைப் புலி­களை அழிப்­ப­தற்கு உத­வின. அவ்­வி­த­மான உத­விகள் அளித்­ததன் கார­ண­மா­கத்தான் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் இல்­லா­ம­லாக்­கப்­பட்­டார்கள்.
இன்­றைக்கு தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இல்­லாமல் ஆக்­கப்­பட்ட பின்னர் அர­சாங்­கத்தின் வாக்­கு­றுதி காற்றில் பறக்­கின்­றது. இதை நிறை­வேற்­றக்­கூ­டி­ய­தாக எமக்குத் தெரி­ய­வில்லை ஆனாலும் இதனை நிறை­வேற்­ற­வேண்­டிய கடப்­பாடு உங்­க­ளுக்கு இருக்­கின்­றது. நீண்ட கால­மாக எமக்­கி­ருந்த பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாமை மற்றும் நாங்கள் ஏமாற்­றப்­பட்­ட­மை­யி­னால்தான் தழி­ழீழ விடு­தலைப் புலிகள் ஆயு­த­மேந்திப் போரா­டினர்.
ஏறத்­தாழ 40 வரு­டங்­க­ளாக எமது மக்கள், எமது இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்­த­லில்லை. நாங்கள் சாத்­வீக ரீதி­யாக போரா­டினோம். எமது தலை­வர்கள் ஒப்­பந்தம் செய்­தார்கள்.. பேச்­சு­வார்த்தை நடாத்­தி­னார்கள் ஒத்­து­ழைப்பு நல்­கினோம். அதற்கு மாறாக தமிழ் மக்கள் மீது அட்­டூ­ழியம் செய்­தார்கள். அத­னால்தான் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் ஆயு­த­மேந்திப் செய்தார்கள். அதனால்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இதன் காரணமாகத்தான் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் உதவிகள் கேட்டீர்கள். அவர்களும் உதவினார்கள் ஆனால் தற்­போது அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடுகின்றமைபோல் தெரிகின்றது. இதை நாங்கள் அனுமதிக்க முடியாது. இவைதான் எமக்குள்ள சவால்கள். எதிர்வரும் மாதங்களில் இந்தக் கருமங்களை நிறைவேற்றக்கூடிய வகையில் நாங்கள் திட்டங்களைத் தீட்டி செயற்படவேண்டிய நிலமை தற்போது ஏற்பட்டுள்ளது.
எமது மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள். ஒருமித்து நிற்கிறார்கள். எமக்குப் பின்னால் நிற்கிறார்கள். ஆதரவு எமக்கு இருக்கின்றது. ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும். நாட்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில் எமது ஒற்றுமையின் மூலமாக நாட்டினுடைய ஆட்சிமுறையைக் கூட தீர்மானிக்கக்கூடியதாக இருந்தது. தெளிவான பாதையில் சென்று எமது இலக்கை அடைய வேண்டும் என்றார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment