ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ஆடை. இந்த படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்திருப்பதால் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக நடிகை லட்சுமிராமகிருஷ்ணன், இந்த படத்தில் அமலாபாலின் நடிப்பை பாராட்டியிருந்தார். அவரது கடினமான உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது. அதேசமயம், ஒரு பெண்ணாகவும், ஒரு தாயாகவும், ஒரு பார்வையாளராகவும் எனக்கு ஆடை டைரக்டரிடமும், அமலாபாலிடமும் சில கேள்விகள் உள்ளது என்று டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மீடியாக்களுக்கு அமலாபால் அளித்த ஒரு பேட்டியில், சாதி, மதம், கலாச்சாரத்தைக் கடந்து அனைவரும் மனிதம் வளர்க்க வேண்டும். ஒருவரை யொருவர் மனிதராக பார்க்க வேண்டும். உண்மையான மனிதம் என்பதை வயதான பிறகே நாம் உணர்கிறோம் என்று கூறினார்.
அப்போது, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் டுவிட்டர் பதிவு குறித்து அமலாபாலிடம் மீடியாக்கள் கேட்டபோது, அவருடைய இந்த பதிவின் நோக்கம் எனக்கு புரியவில்லை. ஆனால், எனது நிர்வாண நடிப்பு குறித்து நியாயமாக விவாதிக்க விரும்பினால் அவரை சந்தித்து பேச தயாராக இருக்கிறேன் என்றார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment